புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர்!

முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர் புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர்!

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி படத்துடன் விஜய் கட்சி மாநாட்டு பேனர் புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு வரும் 27-ம் தேதி புதுச்சேரி அடுத்துள்ள விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதையொட்டி புதுச்சேரியில் விளம்பர பேனர்கள், சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரைச்சாலை சிவாஜி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள பேனரில் விஜய் படத்துடன் முதல்வர் ரங்கசாமியின் படமும் இடம் பெற்றுள்ளது. அதில் ‘2026-ல் ஆளப்போறான் தமிழன்’ என்ற வாசகத்துடன் வேட்டி - சட்டையுடன் விஜய் நடந்து வருவது போலவும், மறுபுறம் முதல்வர் என்ற பெயர் பலகையின் கீழ் விஜய் பேசுவது போலவும் இடம் பெற்ற பேனரில் ஒரு புறத்தில் முதல்வர் ரங்கசாமி படமும் இடம் பெற்றுள்ளது.