சீன லைட்டர் விவகாரம் | ‘வெற்று அரசியலுக்காக பொய்’ - ராம சீனிவாசனுக்கு துரை வைகோ கண்டனம்

வெற்று அரசியலுக்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அவதூறு கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும், என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

சீன லைட்டர் விவகாரம் | ‘வெற்று அரசியலுக்காக பொய்’ - ராம சீனிவாசனுக்கு துரை வைகோ கண்டனம்

சென்னை: “வெற்று அரசியலுக்காக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அவதூறு கருத்துக்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்,” என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

அண்மையில் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன், “சீன லைட்டர்கள் தடை செய்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சியால் தடை பெற்றது போல் துரை வைகோ பேசி வருகிறார். யார் பெயரை வேண்டுமானாலும் இனிஷியல் போடக்கூடாது,” என தெரிவித்திருந்தார். இதற்கு துரை வைகோ சமூக வலைதள பதிவில் பதிலளித்திருக்கிறார்.