கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணி தாமதமாகும்
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் உள்ளது.