கூட்டுறவு அங்காடிகளில் ‘பொங்கல் சிறப்புத் தொகுப்பு’ விற்பனை தொடக்கம்
கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
சென்னை: கூட்டுறவு விற்பனை மையங்களில் பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெரிய கருப்பன், "உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில், பழையன கழித்தல் புதியன புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் போகிப்பண்டிகையில் தொடங்கி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு தமிழ்மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.