சிரஞ்சீவி நடிக்கும் படத்தை தயாரிக்கும் நானி - அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை நானி தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை நானி தயாரிக்கிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்குகிறார். ஸ்ரீகாந்த் ஒடேலா தீவிர சீரஞ்சிவி ரசிகர். இதனை பல மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.