சிறைகளில் முறைகேடு: வழக்குப் பதிவு தாமதம் குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
தமிழக சிறைகளில் ரூ. 14.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத்துறை கடந்த 2022-ம் ஆண்டே அறிக்கை வெளியிட்ட நிலையில், இவ்வளவு காலதாமதமாக எப்ஐஆர் பதிவு செய்தது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை: தமிழக சிறைகளில் ரூ.14.25 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை கடந்த 2022-ம் ஆண்டே அறிக்கை வெளியிட்ட நிலையில், இவ்வளவு காலதாமதமாக எஃப்ஐஆர் பதிவு செய்தது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த கோகிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், புழல் சிறையில் தண்டனை கைதியாக உள்ள தனது கணவர், சிறையில் பார்த்த வேலைகளுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர், என தெரிவி்த்திருந்தார்.