சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் ‘மாமன்’ படப்பிடிப்பு தொடக்கம் 

சூரி,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பிடபட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.16) தொடங்கியது. 

சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் ‘மாமன்’ படப்பிடிப்பு தொடக்கம் 

சென்னை: சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணைந்து நடிக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பிடபட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிச.16) தொடங்கியது.

‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சூரி, ‘விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், எப்போது படப்பிடிப்பு என்பது தெரியாமல் இருந்தது. இதனையும் ‘கருடன்’ படத்தை தயாரித்த லார்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது. திருச்சியில் இதன் படப்பூஜை இன்று காலை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.