தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர் நியமனம்: அமைச்சர்
நேர்காணல் முடிந்தவுடன், தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கை: நேர்காணல் முடிந்தவுடன், தகுதி அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கை இந்திரா நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.37 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.