தமிழக சட்டப்பேரவையில் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோருக்கு இரங்கல்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில், மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பிரபலங்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில், துறைகள் தோறும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம், கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகள் படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, டிச,9,10 தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.