தமிழகத்தில் மருத்துவமனைகள் இருக்கு... போதிய மருத்துவர்கள் இல்லை!
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்துவமனைகளில் சுமார் 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளது. அதிலும், சுமார் 4 ஆயிரம் பேர் பற்றாக்குறை. செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை.