திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்கள் - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

"இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகளாக பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது," என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பொன் இனங்கள் - அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

சென்னை: "இதுவரை 13 திருக்கோயில்களுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்கள் உருக்கி, 442 கிலோ 107 கிராம் எடையுள்ள சுத்த தங்க கட்டிகளாக பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெற்று அந்தந்த திருக்கோயில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது" என்று இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (டிச.18) ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ முன்னிலையில் கோவை மாவட்டம், ஆனைமலை, மாசாணியம்மன் திருக்கோயிலில், அத்திருகோயிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற பயன்பாட்டில் இல்லாத 28 கிலோ 906 கிராம் பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் பொள்ளாச்சி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார்.