திருச்சி, வேலூர் நூலகங்களுக்கு ரூ.1.47 கோடி நிதி உதவி: மத்திய அரசு தகவல்

திருச்சி, வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு மத்திய அரசு ரூ.1.47 கோடி நிதி உதவி செய்துள்ளதாக,  நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. 

திருச்சி, வேலூர் நூலகங்களுக்கு ரூ.1.47 கோடி நிதி உதவி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: திருச்சி, வேலூர் மாவட்ட நூலகங்களுக்கு மத்திய அரசு ரூ.1.47 கோடி நிதி உதவி செய்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் எழுப்பியக் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில், வேலூர் தொகுதி எம்.பி. கதிர் ஆனந்த், நாட்டில் உள்ள நூலகங்களின் தரத்தை உயர்த்தவும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அதன் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், நூலகங்களுக்கான தேசிய இயக்கத்தின் கீழ், தமிழகம் உட்பட நாட்டில் மாநில வாரியாக, மத்திய நூலகங்கள் மற்றும் மாவட்ட நூலகங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார்.