துணை முதல்வர் உத்தரவிட்டும் பழங்குடியினரை பாதுகாக்க தவறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்!

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு பகுதி​யில், ஏராளமான இருளர் பழங்​குடியின மக்கள் வசித்து வருகின்​றனர்.

துணை முதல்வர் உத்தரவிட்டும் பழங்குடியினரை பாதுகாக்க தவறும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்!

செங்​கல்​பட்டு மாவட்டம் திருக்​கழுக்​குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்​சிக்​குட்​பட்ட காரைத்​திட்டு பகுதி​யில், ஏராளமான இருளர் பழங்​குடியின மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​கள், பழங்​குடி​யினர் நலத்​திட்​டத்​தில் அப்பகு​தி​யில் அமைக்​கப்​பட்ட குடி​யிருப்பு​களில் வசித்து வருகின்​றனர். இந்நிலை​யில், காரைத்​திட்டு பாலாற்றின் முகத்து​வாரத்​தின் மிக அருகே பாலாற்​றங்​கரையோரத்​தில் உள்ள பனைமரங்​களுக்கு நடுவே, 40-க்​கும் மேற்​பட்ட குடிசை வீடுகள் அமைத்து இருளர் மக்கள் வசித்து வருகின்​றனர். இவர்​களின் பிள்​ளை​களை அருகில் உள்ள அரசு பள்ளி​களில் சேர்த்​துள்ளனர்.

குடிசைகள் அமைக்​கப்​பட்​டுள்ள பகுதி பாலாற்றில் அதிகள​வில் நீரோட்டம் ஏற்படும்​போது வெள்​ளத்​தில் மூழ்​கும் பகுதியாக உள்ளது. அப்பகு​தி​யில் பழங்​குடியின மக்கள் வசித்து வருவது அசம்​பா​விதங்கள் ஏற்பட வழிவகுக்​கும் என்ப​தால், அவர்களை பாது​காப்பான இடத்​தில் குடியமர்த்த பழங்​குடி​யினர் நலத்​துறை மற்றும் மாவட்ட நிர்​வாகம் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்​குடி​யினர் கோரிக்கை விடுத்​துள்ளனர்.