தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமே தென்மேற்கு பருவமழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் போதிய மழையின்றி வறண்ட வானிலை நிலவியது. வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றம் அளித்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை 5 மணியளவில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யத் தொடங்கியது. மாலை வரை மழை பெய்து வந்தது. மாலையில் மழை வெளுத்து வாங்கியது. இரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.