“நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது” - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில், 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. இதனால், அதில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள், ஏர் கிராக் விழுந்த டைல்ஸ்களை நீக்கிவிட்டு, புதுவகையான டைல்ஸ்களைப் பதிக்கப்படும்

“நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடம் உறுதித் தன்மையுடன் இருக்கிறது” - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

சென்னை: “நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில், 14 ஆண்டுகளுக்கு முன்பாக டைல்ஸ் பதிக்கப்பட்டது. இதனால், அதில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள், ஏர் கிராக் விழுந்த டைல்ஸ்களை நீக்கிவிட்டு, புதுவகையான டைல்ஸ்கள் பதிக்கப்படும். கட்டிடத்தின் உறுதித்தன்மை எந்த காரணத்தாலும், உருகுலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது,” என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கட்டிடத்தில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அதுவெறும் டைல்ஸ் வெடிப்பு என்பதை பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.