பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீர் விட்ட 5 லாரிகளின் பெர்மிட் ரத்து - அதிரடி நடவடிக்கை
விதிகளை மீறி பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை திறந்துவிட்ட 5 லாரிகளின் பெர்மிட்டை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்துள்ளார்.
சென்னை: விதிகளை மீறி பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை திறந்துவிட்ட 5 லாரிகளின் பெர்மிட்டை சோழிங்கநல்லூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்துள்ளார்.
சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களில் கழிவுநீர் லாரிகள் தொடர்ந்து கழிவுநீரை விட்டு மாசுபடுத்தி வந்தன. இந்த விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு, கழிவுநீர் லாரிகளுக்கு பெர்மிட் வழங்குதல், அவை உறிஞ்சி வரும் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு செய்தல் ஆகியவற்றை முறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.