பாஜக - திமுக இடையே ரகசிய உறவு: புதுச்சேரி அதிமுக குற்றச்சாட்டு
பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், திமுகவை சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை தலைவரின் அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடாகும் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி: பொதுக்கணக்கு குழுவின் தலைவரும், திமுகவைச் சேர்ந்த மதிப்பீட்டு குழு தலைவரும், பாஜகவை சேர்ந்த சட்டப்பேரவை தலைவரின் அத்துமீறிய செயலுக்கு துணை போவது என்பது திமுகவுக்கும், பாஜகவுக்கும் உள்ள ரகசிய உறவின் வெளிப்பாடாகும் என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டமன்ற சட்டங்கள் மற்றும் மரபுகள் எதையும் மதிக்காமல் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் செயலாற்றி வருகிறார்.அரசியல் அமைப்பு சட்டம் சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகள் படி சட்டப்பேரவை தலைவருக்கு சட்டமன்றத்தில் பல்வேறு குழுக்களை அமைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, அரசாங்க உறுதிமொழி குழு, மனுக்கள் பற்றிய குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைக்கவும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும், பேரவைத் தலைவர் பொறுப்பாவார்.