மாவட்டம் விட்டு மாவட்டம் மா.செ பதவியா? - புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக புலம்பும் தவெக தம்பிகள்!
10 மாதத்தில் ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்திருப்பதாக விஜய்யின் தவெக தம்பிகள் மார்தட்டி நிற்கும் அதேவேளையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ஆங்காங்கே புலம்பல்களும் கேட்கத் தொடங்கி இருக்கின்றன.
10 மாதத்தில் ஒரு கோடி பேரை கட்சியில் சேர்த்திருப்பதாக விஜய்யின் தவெக தம்பிகள் மார்தட்டி நிற்கும் அதேவேளையில், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு எதிராக ஆங்காங்கே புலம்பல்களும் கேட்கத் தொடங்கி இருக்கின்றன. தவெக-வுக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஜனவரி தொடக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். அதற்கான வேலைகளில் மும்முரமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த், கட்சியின் தலைமை அலுவலகத்தில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தவெக கட்சி மாவட்டங்கள் 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான செயலாளர்கள் பட்டியல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதில், விஜய் மக்கள் இயக்கத்தில் செம்மையாகச் செயல்பட்டவர்களுக்கு தவெக-வில் உரிய முக்கியத்துவம் கொடுத்து பதவிகளை வழங்க வேண்டும் என்பது ஆனந்துக்கு விஜய் தந்திருக்கும் அட்வைஸ்.