புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம்: ஜி.கே.வாசன் கோரிக்கை
ஃபெஞ்சல் புயலால், மழையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தை இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஃபெஞ்சல் புயலால், மழையால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத்தை இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிட வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக அரசு புயல் மழை வெள்ளத்தால் மக்கள், கால்நடைகள் அடைந்துள்ள பாதிப்புக்கு, உயிரிழப்புக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும். ஆனால் அதி கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு ரூ. 2,000, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5,00,000, சேதம் அடைந்த மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 8,500, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, 33 % அல்லது அதற்கு மேல் சேதமடைந்த நெற்பயிர் உள்ளிட்ட இறவை பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 17,000, சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ. 10,000, எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூ. 37,500 என நிவாரணத் தொகையை அறிவித்திருப்பது போதுமானதல்ல.