பொன்னேரி | பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்ட கோங்​கல்​மேடு பகுதி​யில் கடந்த 30 ஆண்டு​களுக்கு மேலாக 46 மலைக்​குறவர் இன குடும்​பங்கள் வசித்து வருகின்றன.

பொன்னேரி | பழங்குடி இன சான்றிதழ் வழங்க கோரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்

பொன்னேரி: திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள ஈகுவார்​பாளையம் ஊராட்​சிக்கு உட்பட்ட கோங்​கல்​மேடு பகுதி​யில் கடந்த 30 ஆண்டு​களுக்கு மேலாக 46 மலைக்​குறவர் இன குடும்​பங்கள் வசித்து வருகின்றன. பழங்​குடி இனத்​தைச் சேர்ந்த இவர்​கள், மூங்​கில் கூடைகளை முடைந்து, அதில் கிடைக்​கும் சொற்ப வருமானத்​தில் குடும்பம் நடத்தி வருகின்​றனர். இவர்​களின் குழந்தைகள் பழங்​குடி இன சான்​றிதழ் இல்லாத​தால் அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது.

கோங்​கல்​மேடு பகுதி மலைக்​குறவர் இன மக்கள், பழங்​குடி இனச் சான்​றிதழ் வழங்கக் கோரி வருவாய்த் துறை​யிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்​றனர். இந்நிலை​யில், இவர்கள் நேற்று பொன்னேரி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு மூங்​கில் கூடைகளை முடைந்து, நூதன போராட்​டத்​தில் ஈடுபட்​டனர்.