மணிப்பூர் பிரச்சினை முதல் 2026 தேர்தல் வரை: திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள்
இந்திய நாட்டின் அனைத்து தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருப்பதாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை: இந்திய நாட்டின் அனைத்து தார்மீக அறநெறி அரசியல் சட்டக் கோட்பாடுகளையும் மதிக்காமல், தங்களது வகுப்புவாதச் சிந்தனைகளை மட்டும் செயல்படுத்தும் அரசாக பாஜக அரசு இருப்பதாக கண்டனம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம். இதில் மொத்தம் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் திமுக உயர்நிலைச் செயல்திட்டக் குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.20) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒரே நேரத்தில் ஆட்சிப் பணியையும், கட்சிப் பணியையும் செவ்வனே செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இந்த உயர்நிலைத் செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.