தீபாவளியை முன்னிட்டு ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை: அதிகாரிகள்
தீபாவளி பண்டிகையையொட்டி, நெய், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, நெய், இனிப்பு வகைகள் உள்பட ஆவின் பொருட்கள் ரூ.118 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினசரி 34 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பால் பதப்படுத்தப்பட்டு பலவகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பால் உப பொருள்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருள்கள் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.