தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி

தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி

சென்னை: தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மகளிர் சுய உதவிக் குழு​வினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்​துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்​குதல், வங்கி கடன் பெறு​வதற்கான வழிவகைகள், காப்​பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்​கு​வதற்காக தமிழ்​நாடு மகளிர் மேம்​பாட்டு நிறு​வனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்​கப்​பட்​டது. நிதிசார் கல்வி​யானது மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்​களுக்​கும், ஏழை மற்றும் பாதிக்​கப்​படக் கூடிய நிலை​யில் உள்ள குடும்பத்​தினருக்​கும் நிதி சார்ந்த விழிப்பு​ணர்வை வழங்​குவதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.