கனமழை எச்சரிக்கை: பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா, கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, டெல்டா, கடலோர மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.12) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி ஆகிய 27 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.