சேலம் மாவட்டத்தின் அனைத்து ஆறுகளிலும் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

ஃபெஞ்சல் புயல் காரணமாக, பெய்த கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள வசிஷ்ட நதி, சுவேத நதி, திருமணி முத்தாறு, சரபங்கா, பாலாறு என அனைத்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது

சேலம் மாவட்டத்தின் அனைத்து ஆறுகளிலும் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!

சேலம்: ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள வசிஷ்ட நதி, சுவேத நதி, திருமணி முத்தாறு, சரபங்கா, பாலாறு என அனைத்து ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் வசிஷ்ட நதி, சரபங்கா என அனைத்து ஆறுகளிலும் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஆறுகள், ஏரிகளுக்கான நீர் வரத்து கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக, நீர் வரத்து கால்வாய்களில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்து உபரிநீரானது ஏரிகள், ஆறுகளில் சென்று கலந்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் இரு கரைகளையும் தொட்டு, வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது.