பள்ளிப் பிள்ளைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்! - மகளிர் வாக்குகளை மடைமாற்றும் தவெக

உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்த்தல், வெள்ள நிவாரண உதவிகள் என தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர் பம்பரமாய் சுழன்று வருகிறார்கள்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு பால், முட்டை வழங்கும் திட்டம்! - மகளிர் வாக்குகளை மடைமாற்றும் தவெக

உறுப்பினர் சேர்க்கை, வாக்காளர் பட்டியலில் ஆள் சேர்த்தல், வெள்ள நிவாரண உதவிகள் என தேர்தலைக் குறிவைத்து நடிகர் விஜய்யின் தவெக கட்சியினர் பம்பரமாய் சுழன்று வருகிறார்கள். கூடவே, வாக்காளர்களை கவரும் விதத்தில் குறிப்பாக, பெண்களை கவரும் விதத்தில் மக்கள் நல திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். அதில் ஒன்றுதான் ஞாயிறு தோறும் பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டம். தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கம் மூலம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது தவெக-வின் திட்டமாக மாறி இருக்கிறது.

பயனாளி​களுக்கான அடையாள அட்டை சகிதம் செயல்​படுத்​தப்​பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தைகளை வைத்து பெண் வாக்காளர்களை நெருங்கி வருகிறது தவெக. இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பார்வை​யாளர்கள், “நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்​த​படியாக குழந்தை​களுக்கு பிடித்தமான நடிகராக உள்ளார். விலையில்லா ரொட்டி, பால், முட்டை வழங்கும் திட்டத்தின் மூலம் அந்தக் குழந்தை​களுக்கு இன்னும் பிடித்தமான மனிதராக அவர் மாறி வருகிறார். இப்படி ஈர்க்​கப்​படும் குழந்தைகள் தங்கள் வீட்டு பெரிய​வர்கள் மத்தியில் விஜய் கட்சிக்காக நிச்சயம் பிரச்​சாரம் செய்வார்கள்” என்றார்கள்.