மின் பயன்பாடு கணக்கீட்டில் தாமதம்: அதிக கட்டணத்தால் தமிழக மக்கள் அவதி!
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 500 யூனிட் வரை மானியவிலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 500 யூனிட் வரை மானியவிலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதற்கு மேல் பயன்படுத்தினால் முழு கட்டணத்தை செலுத்த வேண்டும். 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. கணக்கு எடுத்த 20 தினங்களுக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும், இல்லையேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும். பின்னர் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தியதும் மின் இணைப்பு வழங்கப்படும்.
மின் வாரியம், வீடுகளில், மின் பயன்பாட்டை பொறுத்து, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கூடுதல் வைப்பு தொகை வசூலிக்கிறது. இதன்படி அதிக மின் பயன்பாடு உள்ள வீடுகளில் தற்போது வைப்பு தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின் கணக்கீட்டு ஊழியர்கள், 2 மாதங்களுக்கு மேல் அதாவது 60 நாட்களை கடந்த பிறகு மின் பயன்பாட்டை கணக்கீடு செய்து மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.