ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு திட்டம் தாமதம்: பணம் ஒதுக்கியும் நிலம் எடுக்கவில்லை!

சென்னையை புதுச்​சேரி​யுடன் இணைக்​கும் இரண்டு பிரதான சாலைகள் பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை) மற்றும் கிழக்கு கடற்​கரைச் சாலை. இதில் ராஜிவ்​காந்தி சாலை தற்போது ஐடி நிறு​வனங்கள் மற்றும் குடி​யிருப்பு​களால் நிறைந்துள்ளது.

ஓஎம்ஆர் - இசிஆர் இணைப்பு திட்டம் தாமதம்: பணம் ஒதுக்கியும் நிலம் எடுக்கவில்லை!

சென்னையை புதுச்​சேரி​யுடன் இணைக்​கும் இரண்டு பிரதான சாலைகள் பழைய மகாபலிபுரம் சாலை (ராஜீவ் காந்தி சாலை) மற்றும் கிழக்கு கடற்​கரைச் சாலை. இதில் ராஜிவ்​காந்தி சாலை தற்போது ஐடி நிறு​வனங்கள் மற்றும் குடி​யிருப்பு​களால் நிறைந்துள்ளது. கிழக்கு கடற்​கரை சாலை​யிலும் ஐடி நிறு​வனங்​கள், மிகப்​பெரிய குடி​யிருப்புகள் மற்றும் ரிசார்ட்​கள், பொழுது​போக்கு அம்சங்​களுடன் கூடிய பூங்​காக்​கள், திரையரங்​கு​கள், மிகப்​பெரிய மால்கள் என மக்கள் அதிகம் விரும்​பும் பகுதியாகமாறியுள்ளது.

எனவே, சென்னை மற்றும் புறநகரில் இருந்து தினசரி ஆயிரக்​கணக்​கானனோர் வந்து செல்​லும் சாலையாக மாறி​யுள்​ளது. ஒரே நேர்​கோட்​டில் பயணிக்​கும் இந்த இரு சாலைகளுக்​கும் இடையில் பக்கிங்​காம் கால்​வாய் செல்​கிறது. கால்​வா​யின் இருபுற​மும், ஒஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளை ஒட்டி பெரும் குடி​யிருப்புகள் நிறைந்​துள்ளன. இருப்​பினும், இரு சாலைகளுக்​கும் இடையில் இணைப்பு சாலை என்பது மிகக் குறைவே.