திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை (டிச.12) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் உள்ளே நோயாளிகள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியானது. இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.