போதைப் பொருள், மதுபான பயன்பாடு குறித்த ஆய்வு ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

போதையின் தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

போதைப் பொருள், மதுபான பயன்பாடு குறித்த ஆய்வு ஒப்பந்தம் கோரியது தமிழக அரசு

சென்னை: போதையின் தேவையை குறைத்தல் தொடர்பான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்தின் பயன்பாட்டை கண்டறியும் வகையில் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க தமிழக அரசு ஒப்பந்தம் கோரியுள்ளது.

இதுகுறித்து ஒப்பந்தத்தில் கூறிருப்பதாவது: போதையில்லா தமிழகம் என்பதை எய்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கான பொறுப்பு துறையாக குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை நியமிக்கப்பட்டுள்ளது. இத்துறையானது மத்திய அரசின் சமூக நீதித்துறையின் நிதியுதவியின் கீழ், தமிழகத்தில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.