“புயல் என்பது சிறு புள்ளி அல்ல...” - ‘ஃபெஞ்சல்’ சந்தேகங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் விளக்கம்
“புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும், புதுவைக்கு அருகே என்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக் கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: “புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. அதுவொரு சின்ன புள்ளி போன்றது அல்ல. அதனால்தான் காரைக்காலில் இருந்து மாமல்லபுரம் வரை என்றும், புதுவைக்கு அருகே என்றும் கரையைக் கடக்கும் இடம் குறித்து கூறுகிறோம். புயல் அமைப்பின் மையப்பகுதிக் கூட ஒரு சின்ன புள்ளியாக இருக்காது. அதுவே ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று (நவ.30) பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஃபெஞ்சல் புயல், தற்போது புதுவைக்கு வடகிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 100 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை காரைக்காலுக்கும் மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடக்கக்கூடும்.