தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் சொல்லித் தரப்படும்: கனிமொழி எம்.பி.

மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு நிலை. நிச்சயமாக விரைவில் தக்க பாடம் சொல்லித் தரப்படும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு பாடம் சொல்லித் தரப்படும்: கனிமொழி எம்.பி.

புதுடெல்லி: மத்திய அரசு ஒரு ரூபாய்கூட தமிழ்நாடு அரசுக்கு தராமல் இப்படி கல் நெஞ்சோடு நடந்துகொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கக்கூடிய ஒரு நிலை. நிச்சயமாக விரைவில் தக்க பாடம் சொல்லித் தரப்படும் என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி எம்.பி பேசியதாவது: நான் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். பருவ நிலை மாற்றம் பல்வேறு இயற்கை சீற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. புயல், மழை, வெள்ளம், காட்டுத் தீ போன்ற பிரச்சினைகளால் உயிர்களும் உடைமைகளும் பாதிக்கப்படுகின்றன. மக்கள் அதிகமாக இடம்பெயர வேண்டியுள்ளது.