சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிச.15-ல் தேர்தல்: நீதிபதி வீ.பாரதிதாசன் அறிவிப்பு
சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் என்றும் தேர்தல் அதிகாரி நீதிபதி வீ.பாரதிதாசன் அறிவித்தார்.
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு டிசம்பர் 15-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் நவம்பர் 30-ம் தேதி (சனிக்கிழமை) தொடங்கும் என்றும் தேர்தல் அதிகாரி நீதிபதி வீ.பாரதிதாசன் அறிவித்தார்.
52 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.