‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபர் போல் ஆக  நினைக்கிறார் பிரதமர் -  வைகோ குற்றச்சாட்டு

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும், என பிரதமர் நினைக்கிறார் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபர் போல் ஆக  நினைக்கிறார் பிரதமர் -  வைகோ குற்றச்சாட்டு

திண்டுக்கல்: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அமெரிக்க அதிபரை போல குடியரசு தலைவர் ஆகிவிட வேண்டும், என பிரதமர் நினைக்கிறார் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான வழக்கில் ஆஜராக வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய பிரச்சினை ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ பிரச்சினை. இது நடைமுறையில் சாத்தியமற்றது. எந்த ஜனநாயக நாட்டிலும் ஒரே தேர்தல் என்பது கிடையாது.