“எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன்” - அரிட்டாபட்டியில் சீமான் ஆவேசம்
அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
மதுரை: அரிட்டாபட்டியில் எந்த கொம்பன் வந்தாலும் கனிமம் எடுக்க விடமாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: அரிட்டாபட்டியில் 5 ஆயிரம் ஏக்கர் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், அது 38 ஆயிரத்து 450 ஏக்கர் வரை எடுக்கப்படவுள்ளது தெரியவந்துள்ளது. ஒரு போர் நடந்த பிறகு கூட மக்களை குடி பெயர்த்து விடலாம். ஆனால் நிலக்கரி, மீத்தேன், டங்ஸ்டன் என கனிமம் எடுக்கப்பட்ட இடங்களில் மக்களை குடி பெயர்ப்பது என்பது வாய்ப்பே இல்லை.