விழுப்புரம், கடலூர், புதுவையிலும் மீட்புப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்த வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் போது பெய்த கடுமையான மழையால் தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும், புதுவையிலும் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவைகளைக் களைய மாநில அரசுகள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.