மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதுதொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நெஞ்சக சளி காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று (நவ.28) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தெரிவித்துள்ளது.