முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பொழிவு நிலவும் சூழலில் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்: டிடிவி தினகரன்

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பொழிவு நிலவும் சூழலில் முறையான முன்னறிவிப்புக்கு பின்னரே அணைகள் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், "தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக நேற்று இரவு முதல் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.