முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி காலமானார்: சென்னையில் நாளை உடல் அடக்கம்

தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87.  அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.

முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி காலமானார்: சென்னையில் நாளை உடல் அடக்கம்

சென்னை: தமிழக முன்னாள் உள்துறை செயலர் கே.மலைச்சாமி வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 87. அவரது உடல் அரசு மரியாதையுடன் சென்னையில் நாளை அடக்கம் செய்யப்படுகிறது. தமிழக அரசின் உள்துறை செயலராக இருந்தவர் கே.மலைச்சாமி. இவர் சென்னை அண்ணாநகரில், எண்.89, ஏசி பிளாக், 2-வது தெருவில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். இவர் வயது முதிர்வு காரணமாக தனது இல்லத்தில் நேற்று காலமானார். இறுதிச் சடங்குகள் அவரது இல்லத்தில் நாளை (நவ.8) காலை 10 மணிக்கு நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் அரசு மரியாதையுடன் காலை 10.30 மணிக்கு அண்ணாநகர், புதிய ஆவடி சாலையில் உள்ள வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு 9962080702 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு பிறந்த இவர், 1978-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார்.