மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி: குடியாத்தம் அடுத்த மோர்தானா அணையை சுற்றுலா தலமாக்க வரும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் 47வது பிறந்த நாளை யொட்டி வேலூர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.