ரூ.1500 கோடி முதலீடு, 25,000 பேருக்கு வேலை: ராணிப்பேட்டை காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் அடிக்கல்
ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.16) அடிக்கல் நாட்டினார்.
சென்னை: ராணிப்பேட்டை மாவட்டம் பணப்பாக்கத்தில் தைவானின் ஹாங்பூ நிறுவனம் சார்பில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் ரூ.1500 முதலீட்டிலான தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.16) அடிக்கல் நாட்டினார்.
தைவானைச் சேர்ந்த ஹாங் பூ நிறுவனம், தோல் அல்லாத காலணி மற்றும் விளையாட்டுக்கான காலணிகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில், ரூ.1500 கோடி முதலீட்டில் 25 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் காலணி தொழிற்சாலைக்கு தமிழக அரசுடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டம், பணப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு தலைமைச்செயலகத்தில் இருந்தபடியே காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.