லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம்  உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜுனாவின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை / கோவை: சென்னை, கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனாவின் வீடுகள், கார்ப்பரேட் அலுவலகம் உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று, வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி வியாபாரம் மூலம் முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அந்த பணத்தை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்துள்ளதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.