வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

சென்னை: வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா மீது சென்னை விமான நிலைய போலீஸார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, கடந்த 7-ம் தேதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் தேச விரோதிகள். இரண்டு பேரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.