வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் நினைவகத்தை டிச.12-ல் ஸ்டாலின் திறக்கிறார்
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கேரள மாநிலம் வைக்கத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள பெரியார் நினைவகம், நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் வரும் 12-ம் தேதி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் இரு மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் பங்கேற்கின்றனர்.