ஹெச்.ராஜாவுக்கு 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை: வழக்கின் பின்னணி என்ன?

பெரியார் சிலை உடைக்கப்படும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் விமர்சித்துப் பேசியதாக பதியப்பட்ட 2 வழக்குகளில் பாஜக மூத்த தலைவரும், ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹெச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது

ஹெச்.ராஜாவுக்கு 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை: வழக்கின் பின்னணி என்ன?

பெரியார் சிலை உடைக்கப்படும் என்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் விமர்சித்துப் பேசியதாக பதியப்பட்ட 2 வழக்குகளில் பாஜக மூத்த தலைவரும், ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான ஹெச். ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீடு செய்ய ஏதுவாக இந்த தண்டனை ஒரு மாத காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: பாஜக தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான முன்னாள் எம்எல்ஏ ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் தனது சமூக வலைதள பதிவில் திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதுபோல தமிழகத்திலும் பெரியார் சிலை உடைக்கப்படும் என பதிவிட்டு இருந்தார். இதேபோல கடந்த 2018 ஏப்ரலில் திமுக எம்.பி. கனிமொழி குறித்தும் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார். அதையடுத்து ஹெச். ராஜாவுக்கு எதிராக திமுக நிர்வாகிகளும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பிலும் போலீஸில் புகார் அளிக்கப்பட்டன.