ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்: புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் அமல்

புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். அணியாதோருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு எடுத்துள்ளனர்.

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 வரை அபராதம்: புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் அமல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஜனவரி முதல் மீண்டும் ஹெல்மெட் கட்டாயம் என போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர். அணியாதோருக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க முடிவு எடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் விபத்துகள் அதிகரித்துள்ளது. இதையடுத்து கடந்த 2017-ல் டூவீலர்களில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் உத்தரவிடப்பட்டது. அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் திரும்ப பெறப்பட்டது. அதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 2022-ல் நவம்பரில் மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.