அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் - அண்ணாமலை

“அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள ஒரே நாடு ஒரே தேர்தலை மீண்டும் கொண்டு வந்துள்ளோம் - அண்ணாமலை

கோவை: “அம்பேத்கர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளது. அதைத்தான் 1968-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வந்துள்ளோம்” என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (டிச.18) மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். துணை முதலமைச்சர் உதயநிதியின் நடவடிக்கைகளை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அம்பேத்கருக்கு காங்கிரஸ் செய்துள்ள அவமானங்களை அமித்ஷா பட்டியிலிட்டுள்ளார். அம்பேத்கர் வாழ்ந்த இடம் அனைத்தையும் வாங்கி மக்கள் வந்து செல்லும் இடமாக பாஜக மாற்றியுள்ளது.