ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: அமைச்சர் சேகர்பாபு

ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

ஆதீனங்களின் மனம் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும்: அமைச்சர் சேகர்பாபு

மயிலாடுதுறை: ஆதீனங்களின் மனம் சிறிதும் கோணாமல் இந்து சமய அறநிலையத்துறை தொடர்ந்து பயணிக்கும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள, தருமபுரம் ஆதீனத்துக்குட்பட்ட அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வர் கோயிலில் நன்கொடையாளர் பங்களிப்பில் செய்யப்பட்டுள்ள ரூ.3 கோடி மதிப்பிலான புதிய வெள்ளி ரத வெள்ளோட்ட விழா இன்று (டிச.5) நடைபெற்றது.