‘ஆர்ஆர்ஆர்’ சாதனையை முறியடித்த ‘புஷ்பா 2’ இதுவரை ரூ.1,400 கோடி வசூல்!
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.1409 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப்படம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படம் உலகம் முழுவதும் 11 நாட்களில் ரூ.1,409 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் படம் ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இந்தியில் படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ரூ.561.50 கோடியை இந்தி வெர்ஷனில் மட்டும் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வெர்ஷனில் ரூ.50 கோடியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு மற்றும் இந்தியில் வசூல்தான் படத்தின் பலமாக பார்க்கப்படுகிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, படம் உலக அளவில் 11 நாட்களில் ரூ.1,409 கோடியை வசூலித்துள்ளது.