இயல்பு நிலைக்குத் திரும்பும் புதுச்சேரி கிராமங்கள்; கடலூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து
ஃபெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரியின் நகர பகுதி மற்றும் கிராப்புறங்கள் வெள்ளக்காடானது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை மற்றும் சாத்தனூர் அணை, வீடூர் அணை திறப்பினால் சுண்ணாம்பாறு, தென் பெண்ணையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது
புதுச்சேரி: புதுச்சேரி கிராமப்புறங்களில் புகுந்த வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ளது. புதுச்சேரி - கடலூர் சாலையில் புதன்கிழமை மதியம் முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.
ஃபெஞ்சல் புயல் மழையால் புதுச்சேரி மற்றும் கிராப்புறங்கள் வெள்ளக்காடானது. தொடர் கனமழை மற்றும் சாத்தனூர் அணை, வீடூர் அணை திறப்பினால் சுண்ணாம்பாறு மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.